தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால்.இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலும், விஷ்ணு நடித்த ராட்சசன் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய இரண்டு படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார்.

Advertisement

விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா பேசிய சங்கி பற்றிய விஷயம் பெரும் சர்ச்சையானது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேவாக் பதிவிட்ட பாரத் பதிவால் சர்ச்சையில் சிக்கியது குறித்து பேசி இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றப்போவதாக சர்ச்சைகள் எழுந்தது. அப்போது சேவாக் இந்தயாவிக்ரு பாரத் என்ற பெயர் வைப்பதற்கு ஆதரவாக ட்வீட் செய்து இருந்தார்.

Advertisement

அந்த பதிவிற்கு விஷ்ணு விஷால் ‘அய்யா, உரிய மரியாதையுடன் கேட்கிறேன். இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??” என்று கேள்வி எழுப்பி இருந்தார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் குவிந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘இந்தியா பாரத் என்று பெயர் மாறப்போகிறது என்று விஷயம் பரவிய போது நான் ஒரு ட்வீட் போட்டிருந்தேன்.

Advertisement

அந்த பதிவை நான் போட்டதும் பயங்கரமாக வைரல் ஆகி ஏகப்பட்ட கமெண்ட்கள் வந்தது ஆனால் இதுவரை அரசியல் சார்ந்த எந்த ஒரு கருத்துக்களையும் நான் பதிவிட்டதே இல்லை ஏனென்றால் எனக்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் இந்த விஷயத்தில் ஒரு இந்திய குடிமகனாக எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் பதிவிட்டேன் எனக்கு அது தவறாகவும் தெரியவில்லை.

ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பினால் இரண்டே நாட்களில் நான் ஆன்ட்டி இந்தியன் ஆகிவிட்டேன் ஆன்ட்டி இந்துவாகிவிட்டேன் என் மனைவி பாதி சைனீஸ் அதனால் நான் இந்த ஊரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்னால் ஏன் ஒரு பதிவை போட முடியவில்லை எதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் என்று யோசித்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கிறது அதை நாம் மதிக்க வேண்டும் அதுதான் மனித தன்மை.

Advertisement