சூரி மாதிரியான ஆளுகிட்ட இதெல்லாம் பண்ணனும்னு எங்களுக்கு அவசியமில்லை – பண மோசடி விவகாரம், கலங்கிய விஷ்ணு விஷால்.

0
479
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற வெளிவந்த மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலும் சமீபகாலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் ‘எப்.ஐ.ஆர்’. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

விஷ்ணு விஷால் அளித்த பேட்டி:

இந்த படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன் தந்தை மீது சூரி கொடுக்கப்பட்டிருக்கும் புகார் குறித்து விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எங்களுடைய நட்பு முடிந்துவிட்டது. ஏன்னா, ஒரு விஷயம் நடந்து முடிந்தது. இதுக்கு அப்புறம் நாலு படம் என்கிட்ட பேசிட்டு பண்ணி இருக்கார். அப்போ மனதில் எதை வைத்துக் கொண்டு என்னிடம் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

சூரியால் விஷ்ணு பட்ட கஷ்டம்:

இவ்வளவு தான் என்னையும் அப்பாவையும் புரிஞ்சுகிட்டாரா? எங்க வீட்டில் வந்து சாப்பிட்டு இருக்கார். சூரி மறக்க முடியாத அளவிற்கு வலியை கொடுத்துவிட்டார். என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை. என்னோட அப்பா பற்றியும் பேசி இருக்கிறார். அப்பா சூரிக்காக அவ்வளவு பண்ணி இருக்கார். ஈசியாக பிரஸ்மீட்டில் சூரிக்கு பதில் சொல்ல முடியும். இதை ஏன் பண்ணல என்றால்? எங்க உறவு முடிஞ்சிருச்சு. இப்போ உலகத்துக்கு மட்டும் தான் பதில் சொல்லணும். உலகத்துக்கு என்ன பதில் சொன்னாலும் போலீஸ் பேக்ரவுண்ட் இருந்து வருவதனால் நம்பாது. மேலும், சிலருக்கு கண்டிப்பாக எங்களைப் பற்றி தெரியும். நாங்கள் சூரியை ஏமாற்றி காசு சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் அப்பா பார்க்காத ஆள் இல்லை. பெரிய பதவியில் இருந்தவர்.

சூரி உடன் விஷ்ணு படம் நடிக்காமல் இருக்க காரணம்:

சூரி மாதிரியான ஆளுகிட்ட இதெல்லாம் பண்ணனும்னு எங்களுக்கு அவசியமில்லை. சோறு போடும் தன்மானம், வைராக்கியம் அப்பா கிட்ட இருக்கு. சூரி எப்படி வந்தார் என்று எனக்கு தெரியாது. அப்பா மாடு மேய்த்து, அதில் வர காசில் சம்பாதித்து படித்து ஐ பி எஸ் ஆபிஸர் ஆனார். சூரியை விட 100 மடங்கு வலியை வாழ்க்கையில் பார்த்தவர் என் அப்பா. அப்பா சூரியை மன்னித்து விடு என்று சொன்னார். ஆனால், அப்பா சொன்னாலும் என்னால் மன்னிக்கவே முடியாது. அப்பாவுடைய 35 வருட சர்வீஸில் எந்த ஒரு இளுக்கும் இல்லாமல் எந்த ஒரு குற்றமும் இல்லாமல் இருந்தார். அதனால் சூரியை என் வாழ்க்கை முழுக்கவே மன்னிக்க முடியாது. சூரி உடன் நடித்து வருகின்ற வெற்றி எனக்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
soori

விஷ்ணு தந்தை மீது சூரி அளித்த புகார் காரணம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு சம்பளம் பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறி இருக்கிறார்கள். இதனால் நடிகர் சூரியும் நம்பி பணத்தை கொடுத்து இருக்கிறார். அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து சூரியை ஏமாற்றி இருக்கிறார்கள். உடனே சூரி அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது புகார் அளித்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல் இந்த வழக்கு சில காலமாக நடந்து வருவதால் விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்து அது தொடர்பான அறிக்கையை கோர்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisement