கமலை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பின் பதிவை நீக்கிய விஷ்ணு விஷால் – அவரே கொடுத்த விளக்கம்

0
446
- Advertisement -

மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை விஷ்ணு விஷால் கிளறி விட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கட்டாகுஸ்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில், தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ்.

-விளம்பரம்-

விஷ்ணு விஷால் டீவ்ட்:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் கமலஹாசனின் பிறந்தநாள் விழாவுக்கு விஷ்ணு விஷால் சென்றிருந்தார். அப்போது அவர் கமல் மற்றும் அமீர்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் நான். “சூப்பர் ஸ்டார் ஆர் சூப்பர் ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விஷ்ணு விஷால், ‘’ஸ்டார் ஆர் ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று மாற்றினார்.

ரசிகர்கள் ஆதங்கம்:

இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, இது ரஜினிகாந்த் தரப்பில் வந்த எச்சரிக்கையா? இல்லை ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உத்தரவா? ஏன் மாற்றி விட்டீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்துவிட்டு நீ எப்படி மற்றவர்களை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என்று பங்கமாக கலாய்த்தும் திட்டியும் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் விஷ்ணு விஷால் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

விஷ்ணு விஷால் பதில் டீவ்ட்:

அதில் அவர், சூப்பர் ஸ்டார்கள் என்றால் சூப்பர் ஸ்டார்கள் தான் என்று பதிவிட்டு இருந்த என் ட்வீட்டை டெலிட் செய்து விட்டு மாற்றி ஸ்டார்கள் என்றால் ஸ்டார்கள் தான் என பதிவிட்டேன். உடனே நான் ரொம்ப வீக் ஆகிட்டேன்னு நினைக்காதீங்க, என்னை பொறுத்தவரையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் அனைவரும் சூப்பர்ஸ்டார் தான். அதனால், என்னை வைத்து நெகட்டிவிட்டி பரப்ப நினைக்க வேண்டாம் என பதிவிட்டு ஒரே கும்பிடு போட்டு இருக்கிறார்.

Advertisement