CCLல விளையாட மறுத்த விஷ்ணு ,விக்ராந்த் ! காரணம் இது தான் !

0
5274
vishnu
- Advertisement -

வாழ்க்கையில சுய மரியாதை ரொம்ப முக்கியம். அதனால இந்த வருஷம் நான் CCLல விளையாட போறதில்லை. சாரி சென்னை ரையோஸ் அண்ட் சிசிஎல் ஃபேன்ஸ்…’ என ட்வீட் போட்டு, பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
vishnu vikranthஎன்னங்க பிரச்னை’ என்று விஷ்ணு விஷாலிடம் கேட்டப்போது,”பெரிய இஸ்யூலாம் கிடையாதுங்க. நானும் விக்ராந்தும் ரொம்ப வருஷமா நல்ல புரபஷனலா கிரிக்கெட் விளையாண்டுட்டு இருக்கோம்.

-விளம்பரம்-

சிசிஎல் ஆரம்பிக்கும் போது எது சந்தோஷமா இருந்துச்சுன்னா, இந்த சினிமா, ப்ரஷர், டென்சன் இதையெல்லாம் விட்டுட்டு அங்கே போய் ஜாலியா நல்ல ரிலாக்ஸா விளையாடலாம்னுங்கறதுதான் எங்களோட நோக்கமே. அது என்னன்னா போகப்போக கடைசி இரண்டு, மூன்று வருஷமா அது ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட்ங்றது மாறி சீரியசாக போயிட்டு இருக்கு.

- Advertisement -

மேட்ச் சீரியசா இருந்தா பரவாயில்லை. ஆடியன்ஸ் சீரியசா இருந்தா பரவாயில்லை. அதெல்லாம் நார்மல். ஆனால், எல்லாருக்கும் நாங்க யார்னு ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் வந்துடுச்சு. எடுக்கப்படும் முடிவுகள் சரியான முடிவுங்கறது எங்களுக்குத் தெரியும்.
vishnu
இந்த மாதிரி விஷயங்கள்லாம் சீரியசா வர ஆரம்பிச்சுடுச்சு. இல்லைனா, போகப்போக அந்த என்ஜாயின்மென்ட் போயி ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்துக்கு எங்களை தள்ளிட்டாங்க. சினிமாவில் ஒவ்வொரு படமும் ப்ரூவ் பண்ணனும்ங்கறது எங்க தொழில். அது பண்ணிதான் ஆகணும். ஆனால், ஜாலியா விளையாட போற இடத்திலயும் ப்ரூவ் பண்ணனும் சொல்றதால சந்தோஷம் கம்மியாகிடுச்சு. இந்த வருடம் பிராக்டீஸுக்குக்கூட மூன்று நாள்கள்தான் கொடுத்தாங்க. அந்த மூணு நாள் வச்சு என்னங்க பண்ண முடியும். எங்களை சுத்தி எல்லாம் தப்பா போயிட்டு இருந்துச்சு. அதான் விலகிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இதை ஒருத்தர், இரண்டு பேருனு பெயர் சொல்ல முடியாது. மேனேஜ்மென்ட்ல, எங்க டீம்லனு எல்லா இடத்துலையும் இருக்கு. அதுக்காக மத்த எல்லாரையும் தப்பு சொல்லலை. சில ஆட்கள் அப்படி இருக்காங்க. ஆடியன்ஸ்க்கு ப்ரூவ் பண்ணனும்னு சொன்னா கூட சந்தோஷம்தான்.
vishnu
அவங்களுக்கு ப்ரூவ் பண்ணனும்னு சொல்றாங்க. ஏதாவது ஒரு முடிவு பண்ணா ஏத்துக்குறாங்க. கொஞ்சம் ஏதாவது தப்பாயிடுச்சுனா நம்மளை தப்பு சொல்றாங்க. நாம எடுக்குற எல்லா முடிவும் சரியா வருமானு எல்லா நேரமும் நமக்குத் தெரியாதுல. எல்லா விஷயங்களிலும் கேள்வி.. கேள்வி.. கேள்வி.. எவ்வளவு பதில்தான் கொடுக்குறது. இது ஒண்ணும் நம்ம கரியர் கிடையாதே. ஒரு கிரிக்கெட் ப்ளேயரா என் மனசாட்சி கேக்கலை. கிரிக்கெட் எங்களுக்குத் தெரியாத மாதிரி பேசுறாங்க. பரவாயில்லை. எங்களுக்கு கிரிக்கெட் தெரியாதுனு நினைச்சிட்டு நாங்க விலகிட்டோம். நானும் விக்ராந்தும் சேர்ந்துதான் இந்த முடிவையும் எடுத்திருக்கோம்” என்று முடித்தார் விஷ்ணு.

-விளம்பரம்-
Advertisement