விஷ்ணு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரின் காதலி. விஷ்ணு விஷாலே பகிர்ந்த புகைப்படம்.

0
3747
Vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

-விளம்பரம்-
View this post on Instagram

My bday suprise…? @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is vishnu-vishal-498x1024.jpg
கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் பிறந்தநாளின் போது

இந்த நிலையில் விஷ்ணு விஷால் இன்று (ஜூலை 17) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள ஜுவாலா, விஷ்ணு விஷாலுக்கு கேக் ஊட்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ.

-விளம்பரம்-
Advertisement