குடிப்பழக்கத்தால் அவதிபட்டுள்ள விஷ்ணு விஷால். பின்னர் வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைலில் மீண்ட கதை.

0
3145
Vishnu-Vishal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

-விளம்பரம்-

நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியது, எல்லாருடைய வாழ்க்கையை போல என்னுடைய வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாகவே என்னுடைய வாழ்க்கை மிகவும் கரடு முரடாக இருந்தது. அதை நான் கருப்பு நாட்கள் என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை 2017 ஆம் ஆண்டு பிரிந்தேன். என்னுடைய மகனிடம் இருந்தும் நான் விலகினேன். என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தேன். நான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகும் என்றும் ஒருபோதும் நினைத்தும் பார்க்கவில்லை. இதனால் நான் மதுவுக்கு அடிமையானேன். தினமும் நான் போதையில் தான் இருந்தேன். நிறைய மன அழுத்தம், தூக்கமில்லாமல் உடலை பாதிப்பது.

- Advertisement -

இதனால் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பின் வேலை பளுவும் எனக்கு அதிகரித்தது. என்னுடைய தயாரிப்பு நிறுவனமும் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. சினிமா உலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் நான் சூழ்நிலைக் கைதி ஆனேன் என்று கூட சொல்லலாம். இந்த பிரச்சனைகளால் எனக்கு எட்டு சிறந்த பட வாய்ப்புகளை இழந்தேன். விவாகரத்து, மகன் பிரிவு, உடல்நல பிரச்சனை, குடிப்பழக்கம், மன அழுத்தம் என பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தேன். பின்னர் நான் மெதுவாக இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர ஆரம்பித்தேன். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று உடலை வலுப்படுத்த பயிற்சி மேற்கொண்டேன். உணவுப் பழக்கங்களை ஆரோக்கியமாக சாப்பிட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மதுவை குறைத்துக் கொண்டேன். நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் இருந்தேன். என்னுடைய வாழ்க்கையிலும் தொழிலிலும் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

Image

-விளம்பரம்-

என்னை போன்று இந்த மாதிரி பல பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எல்லா]ருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் பாசிட்டிவாக சிந்தியுங்கள். அதிலிருந்து மீண்டும் மீண்டு வர பாருங்கள். உங்களை நீங்களே தான் சரி செய்ய முடியும். உடல்நலன் எப்போதுமே மன அழுத்தத்தை நல்வழிப்படுத்தும். இதை என்னுடைய சொந்த வாழ்க்கையில் உணர்ந்தேன். உடல்நலம் சரியாக இருந்தால் எதையும் எதிர் கொள்ளலாம் என்பதை கடந்த இரண்டு வருடமாக இதை நான் அதிகம் கற்றுக் கொண்டேன். என்ன நடந்தாலும் உங்கள் மனசாட்சிக்கும், குடும்பத்துக்கு மட்டும் பதில் சொன்னால் போதும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Transformation Level ??????#VishnuVishal

A post shared by Behind Talkies (@behindtalkies) on

தற்போது நடிகர் விஷ்ணு அவர்கள் ஜகஜால கில்லாடி மற்றும் எஃப்ஐஆர் என்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஃப்ஐஆர் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் சிக்ஸ்பேக் போஸ்டர் கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள். ‘எஃப்.ஐ.ஆர்’ என்றால் ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என்று அர்த்தம் என படக்குழு குறிப்பிட்டுள்ளது . இந்த படத்தினை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement