அவர் அனுப்பிய கடைசி Voice Message இதான் – ஹரி வைரவன் இருக்கும் போதும் உதவி செய்துவிட்டு தற்போது இப்படி ஒரு உதவியை அறிவித்துள்ள விஷ்ணு விஷால்.

0
570
vishnu
- Advertisement -

சமீபத்தில் இறந்த ஹரி வைரவன் குடும்பத்திற்கு விஷ்ணு விஷால் உதவி செய்வதாக அறிவித்து இருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்துவந்த நிலையில் சமீபத்தில் காலமானார்.

-விளம்பரம்-

ஹரி வைரவனின் இறப்பை தொடர்ந்து பல்வேரு திரைத் துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக அவர் நடித்த வெண்ணிலா படக்குழு படத்தை இயக்கி சுசீந்திரன், அதே படத்தில் நடித்த சூரி, அப்புகுட்டி ஆகியோர் ஹரி வைரவன் இறப்பிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்தனர். ஆனால், உயிருடன் இருந்த போது உதவாமல் இப்படி இறந்த பின்னர் வருத்தம் தெரிவித்து என்ன பயன் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.

- Advertisement -

இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் :

இப்படி ஒரு நிலையில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நாயகனாக நடித்த விஷ்ணு விஷால், ஹரி வைரவன் குடம்பத்திற்கு உதவி செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் ‘வைரவன் எனக்கு மிகவும் நெருங்கியவர் கடந்த ஆறு மாதமாக அவருடன் நான் தொடர்பில் தான் இருந்தேன். அது வெளியில் யாருக்கும் தெரியாது கடந்த ஆறு மாதமாக என்னால் என்ன உதவி செய்ய முடியுமா அதை நான் செய்தேன்.

வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் :

அவரது மனைவியிடம் கூட என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் குழந்தையின் படிப்பு செலவை கூட நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன் வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் இருக்கிறது. நன்றி மச்சான் என்னை மாப்பிள்ளை என்று தான் கூப்பிடுவார் நன்றி மாப்பிள்ளை எனக்கு நீ உதவி செய்கிற ரொம்ப சந்தோஷம் என்று சொன்னார் நானும் அவரிடம் கவலைப்படாத வைரவன் நான் இருக்கிறேன் என்று சொன்னேன் அதை நேற்று கூட நான் திரும்பவும் கேட்டேன்’

-விளம்பரம்-

விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு :

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். விஷ்ணு விஷால் இறுதியாக நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இறுதியாக இவர் நடித்த FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

லால் சலாம் :

தற்போது விஷ்ணு விஷால், ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இயக்க இருக்கும் லால் சலாம் என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்ககின்றனர். மேலும், ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இப்படத்தில் மும்பையை சார்ந்த டானாக நடிப்பதாகவும், அவர் 30 நிமிடங்கள் லால் சலாம் படத்தில் வருவார் என்றும் தகவல் வந்துள்ளது.

Advertisement