தனது இரண்டாம் திருமணத்தில் விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு – பரவாயில்ல நல்லது தான்.

0
10487
vishnu
- Advertisement -

தனது இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையும் பாருங்க : விட்றா வேண்டிய EVPக்கு – தனது அக்கா வாங்கிய புதிய காருக்கு ரஜினி ஸ்டைலில் வாழ்த்து சொன்ன அவரின் தம்பி.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டார் விஷ்ணு விஷால். வருகிற 22 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனது இரண்டாம் திருமணத்தை பதிவு திருமணமாக செய்ய முடிவு செய்து உள்ளார் விஷ்னு விஷால். கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும். நிலைமை சரியான பின்னர் தான் ரிஷப்ஷனை கூட நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

-விளம்பரம்-
Advertisement