தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு தனி இடம் உண்டு. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாத்துறையில் பத்து வருடங்களை நிறைவு செய்து பயணித்து வருகிறார், விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘ராட்சசன்’திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு இவர் இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர்.விவாகரத்துக்கான காரணத்தை கூறிய விஷ்ணு விஷால், திருமணத்திற்கு முன்பு நான் யாரிடமும் நிறைய பேச மாட்டேன் அது என் கேரியருக்கு தடையாக இருப்பதாக கருதினேன்.
இதையும் பாருங்க : குடும்பத்துடன் உணவு செய்து நேரில் சென்று டாக்டர்களுக்கு அளித்த ஜெயம் ரவி பட நடிகை.
அதனால் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன். எங்கள் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுக்குச் சிறந்தவற்றைக் கொடுப்போம் என்று கூறி இருந்தார் விஷ்ணு விஷால்.
இந்த நிலையில் தனது மகன் குறித்து ஒரு பதிவை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், என்னுடைய மகன் ஆர்யானை சந்தித்த காத்துக்கொண்டிருக்கிறேன். ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் ஆர்யாவின் புகைப்படம் தான் இது என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.