கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறியதாக தெரிகிறது.இதனடிப்படையில் நடிகர் சூரி இடம் பல்வேறு தவணை முறையில் 3.10 கோடி பெற்று சென்னையில் அடுத்த சிறுசேரியில் உள்ள இடம் ஒன்றை சூரி வாங்கியிருக்கிறார்.
ஆனால் நிலம் வாங்கிய பின்னர்தான் அந்த இடம் அரசு அங்கீகாரம் பெற்ற இடம் இல்லை என்று சூரிக்கு தெரியவர பின்னர் அந்த நிலம் குறித்து டிஜிபி ரமேஷிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை தருமாறு சூரிய கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொண்டுள்ள ரமேஷ் 40 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் 2.70 கோடி தராமல் இழுத்தடித்துள்ளார்.இதனால் நடிகர் சூரி, சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், சூரியின் குற்றச்சாட்டை மறுத்த நடிகர் விஷ்ணு விஷால்,
“என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. கண்டிப்பாக நியாயம் வெல்லும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷ்ணு விஷால், இந்த விஷயத்தில் அவர் என்ன செய்தார் என்று ஒவ்வொரு பாயிண்ட்டாக என்னால் சொல்ல முடியும்.
ஆனால், அப்படி செய்தால் அவருடன் நான் 10 வருடம் பழகி இருக்கிறேன் நிறைய தவறான விஷயங்களை சொல்ல வேண்டியது இருக்கும் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனக்கும் என் அப்பாவிற்கும் வந்து நிலம் கொடுக்கல்-வாங்கலில் எந்த சம்பந்தமும் கிடையாது. சில வருசத்துக்கு முன்னர் என் அப்பாகிட்ட வந்து கல்ல விழுந்து கடவுள்னு சொன்ன ஒருத்தர், இப்போ என்னையும் என் அப்பாவையும் 420னு சொல்லறாரு இதுக்கு மேல என்ன சொல்றது தெரியல என்று கூறியுள்ளார்.