இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் ஒரு படத்தில் இருக்கு விலகியுள்ளார் விஷ்ணு விஷால். 'பொன் ஒன்று கண்டேன்' என்ற இந்த படத்தை புதுமுக இயக்குனர் செந்தில் வீராசாமி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'பெல்லிசூப்புலு' என்ற படத்தில் ரீமேக்காகும். மேலும், தமிழ் ரீமேக்கான பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டு இருப்பதால் இந்த படத்திற்காக தேதிகள் ஒதுக்க முடியவில்லை, அதனால் படத்தில் இருந்து விலகுகிறேன் எனவும் அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.




