தமிழ் சினிமாவில் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஷ்ணு விஷால், சிறந்த அறிமுக நடிகர் என்பதற்கான எடிசன் மற்றும் விஜய் அவார்ட்ஸ் விருதுகளை வென்றிருந்தார். வெண்ணிலா கபடி குழு படத்தை தொடர்ந்து ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.
https://www.instagram.com/p/B7LlrfEACU-/
நடிகர் விஷ்ணு அவர்கள் சினிமாத்துறையில் நுழைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. மேலும், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘ராட்சசன்’ திரைப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரிந்து வரும் விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற தனது படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் அதன் பின்னர் கதாநாயகன் படத்தை தயாரித்து இருந்த விஷ்ணு விஷால் இறுதியாக சிலுக்குவருபட்டி சிங்கம் என்ற படத்தை தயாரித்திருந்தார்.
இதையும் பாருங்க : வாணி ராணி சீரியல் தேனுவா இது. இப்போ எப்படி இருக்கார் பாருங்க. லேட்டஸ்ட் வீடியோ இதோ.
தற்போது ஜகஜால கில்லாடி மற்றும் எஃப்ஐஆர் என்ற படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் எஃப்ஐஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது அதில் சிக்ஸ்பேக் வைத்து கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள். 'எஃப்.ஐ.ஆர்' என்றால் 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்று அர்த்தம் என படக்குழு குறிப்பிட்டுள்ளது . இந்த படத்தினை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார்.
https://www.instagram.com/p/B7LwWclgdjz/
இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் எட்டாம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் மேலும் நேற்று அதாவது சனிக்கிழமை உடல் பயிற்சியை முடித்துவிட்டு விஷ்ணு விஷால் எடுத்த புகைப்படம் ஒன்றை இட்டன பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதில் கட்டுமஸ்தான உடலமைப்பு சிக்ஸ்பேக் வைத்து காட்சியளிக்கிறார் விஷ்ணு விஷால்





