சூரி சினிமாவைத் தாண்டி ஊர்ல ஹோட்டல் பிஸினஸ் பண்றார். அவருக்கு காசை டபுளாக்கணும்- விஷ்னு விஷால் பதிலடி.

0
7675
- Advertisement -

பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி ஜி பியுமான ரமேஷ் மீது நடிகர் சூரி அளித்த புகாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன்  தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறியதாக தெரிகிறது.

-விளம்பரம்-
vishnuvishal

இதனடிப்படையில் நடிகர் சூரி இடம் பல்வேறு தவணை முறையில் 3.10 கோடி பெற்று சென்னையில் அடுத்த சிறுசேரியில் உள்ள இடம் ஒன்றை சூரி வாங்கியிருக்கிறார் .ஆனால் நிலம் வாங்கிய பின்னர்தான் அந்த இடம் அரசு அங்கீகாரம் பெற்ற இடம் இல்லை என்று சூரிக்கு தெரியவர பின்னர் அந்த நிலம் குறித்து டிஜிபி ரமேஷிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை தருமாறு சூரிய கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொண்டுள்ள ரமேஷ் 40 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் 2.70 கோடி தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் நடிகர் சூரி, சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

ஆனால், சூரியின் ச்சாட்டை மறுத்துள்ள விஷ்ணு விஷால் கூறியுள்ளதாவது, எனக்கும் எங்க அப்பாவுக்கும் அந்த நிலம் வாங்கிய விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நடிகர் சூரி , தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் இருந்து நிலம் வாங்கினார். அப்போது அன்புவேல் ராஜன் என் அப்பாவுக்கு தெரியும் என்பதால் என் அப்பாவிடம் சொன்னார். எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தார் வாங்குங்க என்று மட்டும் தான் சொன்னோம். ஆனால், சூரி என் அப்பா தான் அந்த நிலத்தை விற்றது போல பேசுகிறார்.

அன்புவேல் ராஜன் ஏமாற்றிவிட்டார். நீங்கள் வந்து பஞ்சாயத்து பண்ணி குடுங்க என்று சூரி எங்க அப்பாவிடம் கேட்டார். நாங்கள் செய்ய முடியாது என்றோம். இதுதான் பிரச்னைக்கு காரணம்.எப்போதோ நடந்த பிரச்னைக்கு இப்போது வந்து புகார் கொடுக்க காரணம், எங்க அப்பாவோட பணி ஓய்வுக்காக காத்திருந்திருந்து தற்போது புகார் அளித்துள்ளார். சூரி சினிமாவைத் தாண்டி ஊர்ல ஹோட்டல் பிஸினஸ் பண்றார். காசை டபுளாக்கணும் ட்ரிபிளாக்கணும்னு நினைக்கிறது அவர்தான். நீங்க பேராசைப்பட்டா கொஞ்சம் அடிபடத்தான் செய்யும். அதுதான் வாழ்க்கை. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நான் டிப்ரஷன்ல இருந்தேன்னு சொல்லியிருந்தேன். இப்போ யோசிச்சு பார்த்தா சூரி அதுல முக்கியமான காரணமா இருந்திருக்கார். தினமும் எனக்கு போன் பண்ணி என்னை ‘நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட’னு டார்ச்சர் பண்ணி, என்னை புலம்ப வெச்சு ஒரு மாதிரியாக்கிட்டார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement