தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து இருக்கிறார்கள். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இது தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால்தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
விஷ்ணு விஷால் குறித்த தகவல்:
அதில் அவர், முதலில் உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என்னுடைய முகம் சோர்வாக இருப்பதை பலரும் கவனித்திருக்கிறீர்கள். அதற்கு காரணம் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

விஷ்ணு விஷால் அறிக்கை:
அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எல்லாம் இடையே எடுத்துக் கொண்டும் வருகிறேன். அந்த மருந்துகளினுடைய பக்கவிளைவு தான் அந்த சோர்வு காரணம். ஆனால், இப்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு ரொம்பவே அவசியமானது. அதே சமயம் நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும் நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும் உற்சாகத்தையும், கட்டா குஸ்தி 2 படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொரு இடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேற செய்கின்றது. அதனால் தான் என் உடல்நிலையில் நிறைய சவால்கள் இருந்தாலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.

நோய் குறித்த விவரம்:
என்னுடைய உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டி அக்கறை என இன்னும் சிறப்பாக என் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள ஊக்கமத்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும் ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டா குஸ்தி 2 படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் இறுதி கட்டப் பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். ஜூலை 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தை நீங்கள் அனைவரும் கண்டு களித்திட காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






