தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது.
தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையையும் உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே விஷ்ணு விஷால் – அமலாபால் இருவரும் முதல் திருமண விவாகரத்து பெற்றுள்ள நிலையில், இவர்கள் மறுமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அமலா, விஷ்ணுவுடன் ராட்சசன் படத்தில் நடித்தார்.அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் தற்போது அந்த நெருக்கம் பின்னர் காதலாக மாறியதால்.தற்போது அந்த காதல் திருமணம் வரை செல்ல இருக்கிறது என்று கூறப்படுகிறது.