ஓ எந்தன் பேபி பட விழாவில் விஷ்ணு விஷால் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ்.
விஷ்ணு விஷால் திரைப்பயணம்:
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, நடிப்பில் உருவாகி இருக்கப்படும் ஓ எந்தன் பேபி. இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் கிருஷ்ணா தான் இயக்கியிருக்கிறார்.

விஷ்ணு விஷால் பேசியது:
இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினருடன் நடிகர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் நடிகர் விஷ்ணு விஷால், என் அப்பாவும் பெரியப்பாவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டிருந்தார்களாம். அப்பா நன்றாக படிப்பார்.

குடும்பம் பற்றி சொன்னது:
பெரியப்பாவிற்கு சினிமாவில் தான் அதிக ஆர்வம். அப்போது அவர்களிடம் படிப்பதற்கு கூட பணம் இல்லை.
இருந்தாலும் எப்படியாவது படங்களின் முதல் காட்சியை பார்த்துவிட வேண்டும் என்று இரண்டு பேருமே ஆசைப்படுவார்கள். பணமில்லாததால் ரெண்டு பேருமே ஒரே டிக்கெட் வாங்கி பாதி படத்தை அப்பாவும் பாதி படத்தை பெரியப்பாவும் பார்த்து கதையை மாறி மாறி சொல்லிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட குடும்பம் தான் எங்களுடையது. பத்தாவது வரைக்கும் இரண்டு பேரும் கஷ்டப்பட்டு தான் படித்தார்கள்.
https://www.youtube.com/watch?v=XTojf3OKsO0
சினிமாவில் நடிக்க காரணம்:
அதற்கு மேல் அவர்களால் படிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு என்னுடைய பெரியப்பா தான் கூலி வேலை செய்து என் அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அதனால் ருத்ராவை சரியான படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது என்னுடைய கடமையாக இருந்தது. நான் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். ஆனால், ஒரு விபத்தால் அது முடியாமல் போனது. நான் சினிமாவிற்கு வருவதற்கும் என்னுடைய பெரியப்பா தான் காரணம். அவரை நான் டாடி என்று தான் அழைப்பேன் என்று ரொம்ப எமோஷனலாக கூறியிருக்கிறார்.






