இவங்களுக்கு எல்லாம் ஒருவர் பணக்காரன் போல தெரிந்தால் அவர்கள் தான் தெரிவார்கள் – சூரி பிரச்சனையில் விஷ்ணு விஷால் காதலி பதிலடி.

0
12924
soori
- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்த பண மோசடி புகாருக்கு விஷ்ணு விஷாலின் காதலி ஜுவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன்  தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறியதாக தெரிகிறது

-விளம்பரம்-

இதனடிப்படையில் நடிகர் சூரி இடம் பல்வேறு தவணை முறையில் 3.10 கோடி பெற்று சென்னையில் அடுத்த சிறுசேரியில் உள்ள இடம் ஒன்றை சூரி வாங்கியிருக்கிறார் .ஆனால் நிலம் வாங்கிய பின்னர்தான் அந்த இடம் அரசு அங்கீகாரம் பெற்ற இடம் இல்லை என்று சூரிக்கு தெரியவர பின்னர் அந்த நிலம் குறித்து டிஜிபி ரமேஷிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை தருமாறு சூரிய கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொண்டுள்ள ரமேஷ் 40 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் 2.70 கோடி தராமல் இழுத்தடித்துள்ளார்.

- Advertisement -

இதனால் நடிகர் சூரி, சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடிகர் சூரியின் இந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷாலின் காதலி ஜுவாலா ‘இந்த சமூகம் எளிதில் ஒருவரைப் பற்றி முடிவு செய்யும் நிலைக்கு மாறிவிடுகிறது. மேலும் நியாயமற்றதாக இருக்கிறது. நல்ல குடும்ப பின்னணியில் பணக்காரர் போல இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும் போது இன்னொருவர் குறிப்பிட்ட தோற்றத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய சமூகம் பரிந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. ஏனெனில், அவர் போராட்டத்தைப் பற்றி பேசுவதாலும், போராடி வந்தவரைப் போல தெரிவதாலும்.

-விளம்பரம்-

தங்களுடைய போராட்டத்தை வெளியில் சொல்லாதவர்கள். போராடியதைப் பற்றி பேசும் நபரை விட குறைவான பிரச்னைகளை சந்தித்தவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கென அடிப்படை உரிமைகள் இல்லையா?’ என்று பதிவிட்டுள்ளார். ஒருவர் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் இருக்கிறார் என்பதை வைத்து அவரை எப்படி நம்ப முடியும். வெள்ளையாக இருக்கும் பெண்ணை மணந்தால் அதே நிறத்தில் குழந்தைகள் பிறக்கும் என்று நினைக்கும் சமூகம் தான் இது.அதே சமூகம் ஒருவர் பார்க்க நன்றாக இருந்தால் முதல் பார்வையிலேயே அவரை வில்லன் எனத் தீர்மானிக்கிறது. பார்ப்பதற்கு ஓரளவு இருக்கிறார் என்பதனாலா? இது நயவஞ்சகம் இல்லையா?”  உண்மை வெளிவருதற்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement