விஷ்ணுகாந்த் குறித்து சம்யுக்தா பகிர்ந்து இருக்கும் ஸ்க்ரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சின்னத்திரை வட்டாரத்தில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் சர்ச்சை தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது என்று விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். பின் விஷ்ணு சொல்வது எல்லாம் பொய். அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் வேண்டும் என்று சம்யுக்தா கூறி இருந்தார். இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். இதன் பின் சம்யுக்தா விஷ்னுவை திட்டி பேசி இருந்தார்.
சம்யுக்தா- விஷ்ணுகாந்த் சர்ச்சை:
இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக இருவரையும் குறித்து ரகசியங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சம்யுக்தாவிடம் ரசிகர் ஒருவர், உங்களை எதற்காக விஷ்ணுகாந்த் கல்யாணம் பண்ணாருன்னு இப்பதான் தெரிகிறது. அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்தால் தான் அவரை யாரும் கல்யாணம் பண்ணவில்லை. அதனால் தான் உங்களை பொய் சொல்லி கல்யாணம் பண்ணி யூஸ் பண்ணி தூக்கி போட்டு விட்டார். சரியா? என்று கேட்டிருக்கிறார்.
சம்யுக்தா அளித்த பதில்:
அதற்கு சம்யுக்தா, அவனுக்கு ஒரு பொண்ணு கூட எங்கேஜ்மென்ட் வரைக்கும் போய் நின்று விட்டது. அந்த பொண்ணு என்ன புண்ணியம் செய்தாலோ தெரியவில்லை. அவள் தப்பித்து விட்டால் நான் மாட்டிக் கொண்டேன். இனி எந்த பொண்ணும் இந்த லூசு கிட்ட மாட்ட போகுதோ? அந்த காம காட்டேரி கிட்ட என்று பதில் கொடுத்து இருக்கிறார். இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, உங்களுக்கு அடுத்த ஸ்டோரியை பார்த்தால் யாரு காம காட்டேரி என்று தெரியும் என்று கூறி சம்யுக்தா அக்கவுண்டில் இருந்து இன்னொரு நபரிடம் பேசி ஸ்க்ரீன் ஷாட் பகிர்ந்து இருக்கிறார்.
விஷ்ணுகாந்த் பதிவிட்ட ஸ்க்ரீன்ஷாட்:
அதில் ஒரு நபரிடம் இருந்து சம்யுக்தாவிற்கு, எருமை உனக்கு சோறு கிடையாது போடி என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு சம்யுக்தா அக்கவுண்டில் இருந்து எனக்கு சோறு தேவையில்லை. நீ போதும் உன்னை சாப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர், ஐயோ எனக்கு இது போதும், எனக்கு இது போதும் என்று கூறியிருக்கிறார். அதற்கு சம்யுக்தா, இது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோ ஒரு வருஷம் கழிச்சு அனுப்பு பார்த்து சிரிச்சுக்கலாம் என்று கூறியிருக்கிறார். நீ போதும், உன்ன சாப்டுக்குறேன் – சம்யுக்தாவின் Insta Chatஐ பகிர்ந்த விஷ்ணுகாந்த்
சம்யுக்தா பதிவிட்ட ஸ்க்ரீன்ஷாட்:
இதை விஷ்ணுகாந்த் பப்பி லவ்வின் சாம்பிள் தான் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த சம்யுக்தா, நான் நிறைய எக்ஸ்போர்ட் பண்ணுகிறேன். இது பத்தவில்லை, ஷார்ட் புரூப், ஆடியோ ப்ரூப் என்னால் இப்போ நினைத்தாலும் ரெடி பண்ணி மீடியாவில் இவனை அசிங்கப்படுத்த முடியும் இவன் எவ்வளவு பண்றேனோ அது எனக்கு இப்ப பிராஃபிட் தான். சீக்கிரமே இது ஒரு முடிவுக்கு வரப்போகிறது. ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் என்று கூறியிருக்கிறார்.