விஷ்ணுவர்தன்-ஆகாஷ் முரளி கூட்டணியில் வெளிவந்த ‘நேசிப்பாயா’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
74
- Advertisement -

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் நேசிப்பாயா. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், குஷ்பூ, சரத்குமார், பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ஆகாஷ் முரளி, ஹீரோயினி அதிதி சங்கரை காதலிக்கிறார். பின் அவர், தன்னுடைய காதலை வெளிப்படையாக அதிதி சங்கரிடம் சொல்கிறார். ஆரம்பத்தில் அதிதி காதலை மறுத்தார். அதன் பின்னர் அவருடைய காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், சில கண்டிஷங்களை போடுகிறார். ஒருவேளை அதிதி ஷங்கர் போட்ட கண்டிஷன் நடக்கவில்லை என்றால் காதலில் இருந்து பிரிந்து விடுவேன் என்றெல்லாம் அதிதி சொல்கிறார்.

- Advertisement -

அதற்குமே ஆகாஷ் சம்மதம் சொல்கிறார். பின் இருவருமே காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருமே பிரியக்கூடிய சூழல் ஏற்படுகிறது. அதன் பின் அதிதி தன்னுடைய வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். ஆனால், அங்கு கொலை வழக்கு ஒன்றில் அதிதி சிறைக்குப் போகிறார். இரண்டு ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு அதிதி சிறையில் இருக்கிறார் என்ற உண்மை தெரிந்த ஆகாஷ் போர்ச்சுக்கல் நாட்டிற்கு போகிறார்.

இதை தொடர்ந்து அதிதி கொலை செய்தாரா? ஆகாஷ் எப்படி அந்த வழக்கிலிருந்து அதிதியை காப்பாற்றினார்? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து விஷ்ணுவர்தன் தமிழில் ஒரு படம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் நடித்து இருக்கிறார். இது தான் அவரின் முதல் படம். தன்னால் முடிந்த அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவருக்கு இது ஒரு நல்ல அறிமுக படமாக அமையும். இவரை அடுத்து ஹீரோயினியாக வரும் அதிதி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
குறிப்பாக, நடிகர் பிரபு ஒரு சில சீனில் வந்தாலுமே அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ரொமான்டிக் திரில்லர் பாணியில் இயக்குனர் கதையை கொண்டு சென்றாலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரிதளவு இல்லை. யுவனின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. அடுத்து என்ன? என்று யூகிக்க கூடிய அளவில் கதைகளை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கிளைமாக்ஸ் ஓகே

யுவனின் பின்னணி இசை ஓகே

குறை:

வழக்கமான கதை தான்

சில காட்சிகளை தெளிவாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதி பொறுமை

மொத்தத்தில் நேசிப்பாயா – நேசிப்பு குறைவு

Advertisement