படத்தின் ப்ரோமோஷன், மேடையில் எல்லை மீறி நடந்துகொண்ட நடிகர், நடிகை – இதோ வீடியோ

0
1362
- Advertisement -

மேடையிலேயே நடிகையின் சேலையை இழுத்து தெலுங்கு ஹீரோ நடனம் ஆடி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷ்வக் சென். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர் ஆவார். தற்போது இவர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகியாக நேஹா செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்டூன் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விஷ்வக் சென் உடைய 11 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம்:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அதிலும் இந்த படத்தில் இருந்து சுட்டம்லா சூசி என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை அனுராக் குல்கர்னி
தான் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது.

சர்ச்சைக்குள்ளான நடன வீடியோ:

இந்த விழாவில் இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் விஸ்வக் சென், நேகா செட்டி உட்பட பட குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். பின் மேடையில் நடிகர் விஸ்வக் சென் அவர்கள் நேகா செட்டியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். அப்போது அவர் நேகாவின் சேலையை பிடித்து இழுத்து நடனமாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

யுவன் திரைப்பயணம்:

இதை பார்த்த பலருமே கண்டனம் தெரிவித்து விஸ்வக் சென்னுக்கு எதிராக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

யுவன் குறித்த தகவல்:

இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார்.

Advertisement