ஜோதிகாவை வைத்து தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்துள்ள விசு.

0
51873
visujo

தமிழ் சினிமா உலகில் புகழ் வாய்ந்த இயக்குனர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிகர் விசு அவர்கள் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

`சம்சாரம் அது மின்சாரம்' படத்தில்.

- Advertisement -

அதனை தொடர்ந்து மணல் கயிறு, ரகசியம், புதிய சகாப்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவர் கடைசியாக தங்கமணி சினிமாவிற்கு என்ற படத்தை இயக்கி உள்ளார். பின் இவர் சீரியல்கள், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் உள்ளார். வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இதையும் பாருங்க : நர்ஸாக மாறிய அனிதா சம்பத். இணையத்தில் கலக்கும் இளம் பெண்கள்

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் குடும்பகதை என்றால் இவருடைய படம் தான் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமானவர்.1986 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை.

Image result for actress jyothika

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விசு அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் சம்சாரம் அது மின்சாரம் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கிளைமாக்ஸ் மனமாச்சார்யங்களோடு சேர்ந்து இருப்பதை விட ஒரு ரயிலின் தனித்தனி கம்பார்ட்மெண்டில் பயணிக்கும் கதாபாத்திரம் தான். தனிக்குடித்தனம் போவது நல்லது என்று நான் அந்த படத்தில் சொல்லி இருந்தேன்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு வீட்டுக்குள்ளேயே தனித் தனி ஆளாக போய்விட்டார்கள். அந்த அளவிற்கு குடும்பங்கள் இருந்திருக்கிறது. கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் தனித்தனியாக பிரிந்து வாழ்வதை தான் நல்லது என்று வாழ்ந்து இருக்கிறார்கள். இது நல்லது இல்லை என்று இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் சொல்லப் போகிறேன். என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால் என்னை ஆதரித்த என்னுடைய குருநாதர் கேபி சார் இப்போது இல்லை. அது மட்டுமில்லாமல் சரவணன் சார் இந்த படத்தை எடுக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்.

Image result for samsaram adhu minsaram

கேஆர்ஜி யும் இல்லை. இதனால் கொஞ்சம் வருத்தம். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை கதையை நடிகை ஜோதிகா ஆபீஸில் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மனம் வைத்தால் மட்டும் தான் சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம் பாகம் வரும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியவர் ஜோதிகா இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் அந்த வாய்ப்பு விரைவில் கைகூடும் என்று கூறினார்.

தமிழ் சினிமாவின் 90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

Advertisement