கலைஞரை சந்தித்துவிட்டு அவசர அவசரமாக ஹைத்ராபாத் சென்ற அஜித்..! காரணம் இதுதான்

0
163

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

ajithkumar

சமீபத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நலத்தை விசாரிக்க பல அரசியில் பிரமுகர்களும், நடிகர்களும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கலைஞர் அவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்திருந்தார்.

மருத்துவமணையில் கலைஞரை சந்தித்து விட்டு சில நாட்கள் தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து வந்த அஜித், தற்போது ‘விசுவாசம்’ படப்பிடிப்புகளை தொடர மீண்டும் ஹைதராபாத் சென்றுள்ளார். சமீபத்தில் விமான நிலையத்தில் அஜித்தை ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ajith

தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோ செட்டில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்புகளை எடுத்து வருகின்றனராம். இதற்காக ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமத்தை போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் படத்தில் கிராம கதைகளும் இந்த படத்தில் அதிகமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும், விரைவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.