அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா 4வது முறையாக இணைந்துள்ள ‘விஸ்வாசம் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) அதிகாலை 3.40 மணிக்கு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், தற்போது சமூக வலைதளம் முழுக்க ட்ரெண்டாகி வருகிறது.
அடேய் மின்னல் வேகம்டா ??????? #ViswasamFirstLook pic.twitter.com/Kkuu5MrVBS
— ❤️தல ரியாஸ்❤️ (@Nair_offl) August 22, 2018
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த செப்டம்பர் மாதம் 13 தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடபோவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால்,இன்று (ஆகஸ்ட் 23) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமான fan made போஸ்டர்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இன்று ‘விஸ்வாசம் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அந்த போஸ்ட்டரை சுவரொட்டியாகவும், பேனர்களாகவும் அஜித் ரசிகர்கள் அச்சிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை வெளியான ‘விஸ்வாசம் ‘ படத்தின் போஸ்ட்டரை காலையிலே பேனராக அச்சடித்து அஜித் ரசிகர் ஒருவர் மாஸ் காட்டியுள்ளார். தற்போது அந்த ரசிகரின் கையில் ‘விஸ்வாசம் ‘ படத்தின் பேனர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.