விஸ்வாசம் “First Look Poster-ல்” நீங்கள் இதை கவனித்தீர்களா..?

0
183
Visvasam
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா 4வது முறையாக இணைந்துள்ள ‘விஸ்வாசம் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) அதிகாலை 3.40 மணிக்கு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், தற்போது சமூக வலைதளம் முழுக்க ட்ரெண்டாகி வருகிறது.

visvasam

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீங்கள் கவனிக்க மறந்த ஒரு சில விடயங்களை தற்போது காணலாம்.

- Advertisement -

1. ‘விஸ்வாசம் ‘ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் “v ” அதாவது visvasam என்ற பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும் வகையில் ‘v ‘ என்ற வார்த்தையை வைத்து ஒவ்வொரு வார்த்தையும் நிறைவடைகிறது.

2. பர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னனியில் ஒரு புறம் நகர பின்னணியும் மற்றொரு புறம் கிராம பின்னணியும் இருக்கிறது. எனவே, ஏற்கனவே வெளியான தகவல் போல இந்த படம் நகரம் மற்றும் கிராமத்தில் நடக்கும் ஒரு கதையாக இருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

3. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பல தகவல்கள் வந்தது. தற்போது இந்த பர்ஸ்ட் லுக் மூலம் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

4. அதே போல கிராம கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் பின்னனியில் நகரமும், நகர கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் பின்னனியில் கிராமும் இருக்கின்றது.

5. அதே போல கிராம கெட்டப்பில் இருக்கும் அஜித் வெள்ளை வேஷ்டி,சட்டையில் இருக்கும் அஜித் அரசியல்வாதியாக இருக்கலாம், நகர கெட்டப்பில் இருக்கும் அஜித் முறுக்கு மீசையுடன் ஒரு தாதா லுக்கில் இருக்கிறார், இதனால் அவர் ஒரு ஏரியா தாதாவா என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement