‘எத்தணை உயரம் இமயமலை, அதில் இன்னொரு சிகரம் எங்க தல’ என்ற பாடல் வரிகளை கேட்டதும் அஜித் ரசிகர்களுக்கு ஞாபகம் வரக்கூடியவர் “விஸ்வாசம்” படத்தின் பாடலாசிரியர் அருண்பாரதி தான்.
பாடலாசிரியர் அருண் பாரதி:
“அண்ணா துறை, காளி, சண்டக்கோழி 2” போன்ற மூன்று படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும், தற்போது அஜித் நடித்து வரும் “விஸ்வாசம்” படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார்.
இதுநாள் வரை 3 படங்களில் பாடல்கள் எழுதி இருந்தாலும் சமீபத்தில் இவர் ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகளை வெளியிட்டதன் மூலம் பெரும் பிரபலமடைந்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அருண்பாரதி அஜித் பற்றி பேசுகையில், நாம ஒரு கோவிலுக்குள் செல்லும் போது எப்படி ஒரு பாசிட்டிவ் வைபரேஷன் வருமோ அது மாதிரி தான் அஜித் சார். எப்படி அப்துல் கலாமை பார்த்தால் எப்படி ஒரு இன்சிபிரஷன் போல இருக்கோமோ அப்படி தான் அவரும்.
ஒரு ஸ்டார் என்றால் படப்பிடிப்பில் பந்தாவாக இருப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவர் அப்படி இல்லை இதுவரை படப்பிடிப்பு தளத்தில் அவர் பின்னால் உதவியாளர் கூட இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு எளிமையானவர் என்று கூறியுள்ளார்.மேலும், அவரின் குணம் பிடித்துப்போய் அவரின் கையெழுத்தையும் வாங்கியுள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி.