ஒரு கையில் மது கோப்பை, மற்றொரு கையில் இது. விஸ்வாசம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.

0
10929
Surekha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுரேகா வாணி. சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் நிறைய படங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் பல மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன் முதலில் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த தெய்வத்திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, எதிர் நீச்சல், மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழியை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக வாய்ப்புகள் வருகிறது.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாகி வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தற்போது நடிகை சுரேகா வாணி அவர்கள் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலை, சமையல் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகை சுரேகா வாணி அவர்கள் சமையல் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் ஒரு கையில் மது கோப்பையில் ஓயினையும் மறுகையில் மாம்பழத்தையும் வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இது ஒரு புதுவிதமான காம்பினேஷன். இன்று நான் முயற்சிக்க போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தான் இவர் நடித்து வருவார். ஆனால், இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய கணவர் காலமானார்.

Advertisement