சர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..!

0
407
Visvasam

விஜய்யின் ‘சர்கார்’ சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ள இந்த நிகழ்விற்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

தற்போது வந்த தகவலின்படி எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் படபிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த மாதம் நவம்பரில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படபடிப்புகள் நடைபெற உள்ளது.

மேலும், இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, தீபாவளிக்கு முன்னதாக இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிரிபார்க்கபடுகிறது.