பொங்கல் முன்பே வெளியாக உள்ள விஸ்வாசம்..!கூடவே ட்ரைலர் மற்றும் பாடல் அப்டேட்..!

0
900
Visvasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக “விஸ்வாசம் ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு முதன் முறையாக அஜித் படத்தில் இசையமைக்கவுள்ளார் இசை அமைப்பாளர் இமான்.

- Advertisement -

மேலும்,இந்த படத்தில் தல அஜித்துடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்த திரைபடம் பொங்கல் அன்று வெளியாகாது என்றும் அதற்கு பதிலாக 26 ஆம் வெளியாகும் என்றும் சில செய்திகள் சமூக வலைதளத்தில் உலாவி வந்தது.

Visvasam

-விளம்பரம்-

இந்நிலையில் விஸ்வாசம் திரைபடடம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 10 தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும், வரும் டிசம்பர் முதல் வாரத்திலேயே வெளியாக உள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுளளது.

Advertisement