ஒரு நிமிடத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை முறியடித்து “விஸ்வாசம் ” செகண்ட் லுக்..!

0
1681
Visvasamsecondlook
- Advertisement -

விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸர் வெளியாகி பல்வேறு சாதனைகளை புரிந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே போல “சர்கார்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும் ட்விட்டரில் பல்வேறு சாதனைகளை புரிந்தது. ஆனால், இன்று வெளியான “விஸ்வாசம்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் “சர்கார்” படத்தின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

-விளம்பரம்-

Visvasamsecondlook

- Advertisement -

ரஜினி நடிக்கும் ‘பேட்ட’, விஜய் நடிக்கும் ‘சர்கார்’ என அவரவர் ரசிகர்களுக்கு ஹாட் நியூஸ் வருவது போல், அஜித் ரசிகர்கள் அவர்களுக்கு ஏதேனும் அப்டேட் வராதா என்று காத்துக்கொண்டிருநந்த வேலையில் இன்று (அக்டோபர் 25) படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை வேடத்தில் மாஸ் மற்றும் க்ளாஸ் லுக்கில் இருந்த அஜித், செகண்ட் லுக் போஸ்டரில் லுக்கில் உள்ளார். இத்தனை நாட்கள் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த செகண்ட் லுக் போஸ்டர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், இன்று ட்விட்டர் பக்கத்தில் #visvasamsecondlook #visvasampongal #visvasamthiruvizha போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும், இன்று காலை 10.30 மணிக்கு வெளியான “விஸ்வாசம்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் 1 நிமிடத்தில் 11 ஆயிரம் ரீ-ட்வீட்களையும் 16.7 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. ஆனால், விஜய்யின் ‘சர்கார்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் 1 நிமிடத்தில் 9 ஆயிரம் ரீ-ட்வீட்களையும் 14.8 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement