முடிந்தது விஸ்வாசம் படப்பிடிப்பு..!அடுத்த படத்திற்கு கெட் அப் மாறிய அஜித்..!

0
245
Ajith

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வந்தது.

Ajith

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கபட்டு வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.சமீபத்தில் நடிகர் அஜித் இயக்குனர் சிவாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

விஸ்வாசம் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜித் இரண்டு கதாபாத்திரத்திலும் தாடியுடன் தான் இருந்து வந்தார். ஆனால், இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் தனது தாடியை ஷேவ் செய்துவிட்டு மிகவும் சமார்ட்டாக காட்சியளிக்கிறார். ஒருவேளை அஜித்தின் அடுத்த படத்தில் நடிகர் அஜித் தாடியில்லாமல் நடிக்கிறாரா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை தீரன் படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்கவுள்ளார் .மேலும்,படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.