விஜய் பாணியில் அஜித்..!விஸ்வாசம் கதை இது தான்..!வெளியான புதிய தகவல்..!

0
935
Visvasam

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சிவா விஸ்வாசம் படம் குறித்து பேசுகையில், இந்த படத்தில் அஜித் அஜித்திற்கு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இதுகுறித்து பேசிய சிவா, இந்த படம் தேனீ மாவட்டத்தில் நடக்கின்ற ஒரு கதை. ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அன்பாய் இருப்பதை விட விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதை தான் இதில் ஆணித்தனமாக சொல்லி இருக்கிறோம்.

இந்த படத்தில் நடிகர் அஜித், தூக்குத்தூரை என்ற முரட்டு தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பாஷையில் பேசி அசத்தியுள்ளார் . இதற்காக சந்திரன் என்பவரிடம் பயற்சி மேற்கொண்டார் அஜித். முதல் பாதியில் கிராமத்திலும் இரண்டாம் பாதி நகரத்திலும் கலக்குகிறார். நயன்தாராவிற்கு வெயிட்டான வேடம் என்றும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளாராம். விவசாயம் எவ்வளவு முக்கியம் என்று கூறும் படமாக இது இருக்குமாம்.இப்படத்தில் இரண்டாம் பாதியில் சிட்டிக்கு செல்லும் அஜித் அங்கே விவசாயத்தின் முக்கியத்தை பற்றி சிட்டியில் வாழும் மக்களுக்கு கூறும் கதாத்திரத்தில் நடித்துள்ளாராம். நடிகர் விஜய் கத்தி படத்தில் இது போன்ற விவாசியிகளுக்கு போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அதே ஸ்டைலில் தல அஜித்தும் களமிறங்கியுள்ளார்.

Advertisement