எப்போது வெளியாகும் விசுவாசம் பட டீசர் ? இதோ தேதி ! ஆரவாரத்தில் ரசிகர்கள்

0
1697
viswasam-teaser-date

தல அஜித்தின் அடுத்த படம் விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளது. இந்த படத்தினையும் இயக்குனர் சிவாதான் இருக்குகிறார். இந்த படத்திற்காக அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றி தற்போது மீண்டும் முடிக்கு பிளாக் ஹேர் கலரிங் செய்துள்ளார்.

visvasam-teaser

இதனால் படம் கண்டிப்பாக வித்யாசமாக இருக்கும் என தல ரசிகர்கள் ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும், படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது.

படத்தின் இசையமைப்பாளராக முதலில் யுவன்ஷங்கர் ராஜா என கூறப்பட்டது அதன் பின்னர் அவருக்கு நிறைய கமிட்மென்ட் இருப்பதால் இந்த வாய்ப்பு அனிருத்திற்கு சென்றதாக சொல்லப்பட்டது. அத்தனையும் தாண்டி விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி எஸ் தான் படத்திற்கு இசையமைக்கிறார் எனவும் கூறப்பட்டது.

தற்போது இந்த வாய்ப்பு யாரிடம் உள்ளது என்பதுதான் கேள்வி. இந்த கேள்விக்கு பதில் நாளை கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. விஸ்வாசம் படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பதையே ஒரு டீசர் மூலம் வெளியிட உள்ளது படக்குழு. இந்த டீசர் நாளை 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாக உள்ளது என அறிவுப்பு வந்துள்ளது.