விஸ்வாசமா? பேட்டயா? யார் படம் முக்கியம்..!பிரபல திரையரங்கம் சொன்ன பதில்..!

0
672
Pettavisvasam

வரும் 2019 பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. முக்கியமாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி மற்றும் அஜித்தின் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, நவாசுதீன் சித்திக்கி, த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதே போல சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படமும் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ இரண்டுமே ஒரே தேதியில் வெளியானால் வசூல் ரீதியாக பின்னடைவாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் கூறப்படுகிறது.

Rakki-Cinimas

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல ராக்கி திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட அல்லது விஸ்வாசம் இரண்டில் எதை பொங்கலுக்கு திரையிடுவீர்கள்’ என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ராக்கி சினிமாஸ் ‘தல படம் தான்’ என்று பதிவிட்டுள்ளனர்.