விஸ்வரூபம் 2 படம் வெளியிடும் தேதி இதுதான்..!

0
332
viswaroobam

உலகநாயகன் கமல் அரசியலில் ஈடுபட்ட பிறகு தனது சினிமா வாழ்க்கைக்கு சற்று ஒய்வு கொடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் நடித்து வந்த ‘பல்ராம் ராயுடு’ படமும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

kamal-haasan

கமல் அரசியலில் ஈடுபட்ட பிறகு இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டாரோ என்று அவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கமல் ரசிகர்களுக்கு தெம்பூட்டும் விதமாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்மரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் ஒன்று இம்மாதம் (ஜூன்) 11 ஆம் தேதி 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாலிவுட் டீசரை பாலிவுட் நடிகர் அமீர் கானும், தமிழ் படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசனும் வெளியிடவுள்ளானர்.

Aamir- kamal

கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்’ திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் , இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.