அரை போதையா. அரைகுறை ஆடையில் மீரா ஆடிய ஆட்டம். பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

0
6806
meera-mithun

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. ஆனால், கடந்த இரண்டு சீசன்கள் இல்லாத அளவு மூன்றாவது சீசனில் தான் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார்.

மீரா மிதுன் மறுப்பு

ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் இவர் பங்கு பெற்ற அந்த அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனனின் காதலியான நடிகை சனம் ஷெட்டிக்கு இவரது அழகி பட்டம் கொடுக்கப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல் மீரா மிதுன் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக இருந்து வந்தார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : படு ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். ஜிம் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

மேலும்,இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று இவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீராமிதுன் பிக்பாஸ் குறித்தும், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சரியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அதேபோல சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பள பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் குழுவிற்கும், விஜய் தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடும் தோணியில் பேட்டி ஒன்றையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீரா மிதுன். மேலும், 8 தோட்டாக்கள் தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார், ஆனால், பிக்பாஸில் இவரது லட்சணத்தை கண்டு இவர் நடித்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கினர். மேலும், இவர் அருண் விஜய் நடித்துவரும் அக்னிசிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் மிகவும் விரக்தி அடைந்த மீராமிதுன் தற்போது மும்பையில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருவதாகவும் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மேலும், தற்போது மும்பையில் சுற்றித் திரிந்து வரும் மீராமிதுன் அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் நடு ரோட்டில் புகைபிடிப்பது, இரவு நேரத்தில் பார்ட்டியில் பீர் குடிப்பது என்று பல்வேறு மோசமான பதிவுகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் உள்ளாடை அணியாமல் படு மோசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் நடன மாடிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ஏதோ குடித்துவிட்டு நடனமாடுவது போன்று இருக்கிறார் என்று மீரா மிதுனை ட்விட்டர் வாசிகள் அரை போதையில் அடுக்கிறீர்களா என்று வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement