தமிழகத்தில் 3 முக்கிய மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட 78 லட்சமா.! பின்னணி என்ன.!

0
693
Viswasam-Trailer
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை (ஜனவரி 10) வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டாரரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக களமிறங்க உள்ள இப்படம் தமிழக்தில் 450 கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஒன்றரை ஆண்டுகள் கழித்து அஜித்தின் படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா ரூ.78 லட்சம் கடன் பாக்கியை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளின் விநியோகஸ்தர் சாய்பாபா ரூ.78 லட்சம் கடன் பாக்கியை திருப்பி தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை கோரி சினிமா பைனான்சியர் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை யில் சாய்பாபா பெற்று இருந்த கடன் பாக்கி ரூ.78 லட்சம் ரூபாயில் முதலாவதாக ரூ.35 லட்சத்தை திருப்பித் தர சம்மதம் தெரிவித்ததாகவும், மீதமுள்ள பணத்தை 4 வாரங்களுக்குள் தருவதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் விஸ்வாசம் படத்தை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது மகழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement