உண்மையில் சர்கார் சாதனையை முறியடித்ததா விஸ்வாசம்.!தியேட்டர் உரிமையாளர் போட்ட ட்வீட்.!

0
863
Viswasam-vs-sarkar

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக அஜித் படம் தமிழகத்தில் அதிக வசூலை செய்துள்ளது.

Viswasam-Kerala

இந்நிலையில் விஸ்வாசம் படம் விஜய்யின் சர்கார் பட வசூலை கூட முறியடித்ததாக சில செய்திகளும் பரவி வருகிறது. தமிழகத்தை போன்றே வெளி மாநிலங்களிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதனை உறுதி செய்யும் வகையில் ஆந்திராவில் இருக்கும் எஸ்.ஜே. சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் வருண் விஸ்வாசம் படம் தனது திரையரங்கில் சர்கார் படத்தின் வாழ்நாள் வசூலை முந்திவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படத்திற்கு எதிராக வெளியான போதும் பேட்ட படத்தை விட குறைவான நாட்களில் 125 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் பேட்ட படம் 11 நாட்களில் தான் 100 கோடி வசூல் செய்யும் என்று கூறப்பட்டது. அது போக விரைவில் 2.0 படத்தின் சாதனையையும் முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement