வயதான ஆண்டி போல இருக்கீங்க – கேலிகளுக்கு அஜித்தின் ரீல் மகள் அளித்த பதிலடி.

0
2168
anikha
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் .

- Advertisement -

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம்இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்களை பார்த்து ஆண்டி என்றும் வயது மீறி தோற்றமுள்ளவர் என்றும் வயதுக்கு ஏற்ற மாதிரி போஸ் குடு என்றும் கமன்ட்கள் வருவதாக ரசிகை ஒருவர் கூறி இருந்தார்.

இந்த விமர்சங்களுக்கு எல்லாம் பதில் அளித்துள்ள அனிகா, பொதுவாக இது போன்ற புகைப்படங்களை காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நபர்தான் நான். நான் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தான் இந்த போட்டோ ஷூட் .என்னுடைய பாதுகாப்பற்ற தன்மையை மறைக்க நான் மேக்கப் போடுவது கிடையாது. மேக்கப் என்பது என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்று. இதைப்பற்றி நான் பலமுறை கூறி விட்டேன் என்று பதில் கூறியிருக்கிறார் அணிகா.

-விளம்பரம்-
Advertisement