திரையரங்குகளை விடுங்க.! அமேசான் பிரைம்ல ‘விஸ்வாசம்’ படம் செய்த சாதனை பற்றி தெரியுமா.!

0
283
Viswasam-Amazon-Prime

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.  

விஸ்வாசம் படம் 6 வது வாரம் நெருங்கிய போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்த படம் 150 திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி குறித்து படத்தின் விநியோகிஸ்தர் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்தும் , ஹிட் குறித்தும் எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே பதில்தான். தமிழ்சினிமாவின் ஒரே மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம்தான் என்று ஆணித்தனமாக சொல்கிறார்.

இந்த படம் 50 வது நாளை நெருங்கும் இந்த நிலையில் பிரபல ஆன் லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வளைத்தளத்தில் வெளியிட்டது. வெளியிட்ட சில மணி நேரத்தில் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் படமாக பெயர் எடுத்துள்ளது.