கண்ணான கண்னே பாடல் இந்த என் வாழ்கையில் இருந்து உருவானது தான் – பிரபல நடிகர் பேட்டி.

0
4030
- Advertisement -

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். அதிலும் இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடல் பல மொழி மக்களிடம் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்த விசுவாசம் படத்தின் கதை நடிகர் பாலாவின் சொந்த கதை என்பது தெரிய வந்து உள்ளது. நடிகர் பாலா இயக்குனர் சிவாவின் தம்பியின் ஆவார். மேலும், இந்த படத்திற்கு படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித் அவர்கள் பாலாவிடம் அரை மணி நேரம் போனில் பேசினாராம். பாலாவை மனதில் வைத்துக் கொண்டு தான் தல அஜித் இந்த படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தல அஜித் பாலாவை மீண்டும் படங்களில் நடிக்க வருமாறு அறிவுரை கூறினார். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலகுமார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

பின் சினிமாவில் இருந்து சில காலம் இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அம்ருதா சுரேஷ் என்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் திருமணம் ஆன சில வருடங்களிலேயே பிரிந்து வாழ தொடங்கிவிட்டார்கள். பிறகு 2019ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்தது.

bala actor amritha suresh

இவர்கள் இருவருக்கும் அவந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். தற்போது அவருடைய மகள் தாய் அம்ருதா உடன் வசித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பாலா மற்றும் அம்ருதா சுரேஷ் இருவரும் ஒன்றிணைய போகிறார்கள் என்று கடந்த சில நாட்களாகவே மலையாள சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதெல்லாம் பொய் என்று அமிர்தா தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த ஒரு வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நெட்டிசன்களிடம் கேட்டுக் கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement