கடந்த ஆண்டு காலமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம் தெரிவித்த நடிகை.

0
49670
Surekha
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோன்றுகின்றனர். அந்த வகையில் தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார். தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : வனிதா சகோதரி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா – குயூட் குடும்ப புகைப்படம் இதோ.

- Advertisement -

சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவரது கணவர் காலமானார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) மறைந்த தனது கணவரின் பிறந்தநாள் என்பதால். தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் நடிகை சுரேகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement