-விளம்பரம்-
Home பிக் பாஸ்

நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவர்கள் அந்த பக்கம் சாஞ்சிட்டாங்க – முகேன் காதலி வெளியிட்ட வீடியோ.

0
55086

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் அதிக காதல் கதை ஓடியது என்று கூறலாம். இந்த சீசனில் பல்வேறு இளம் போட்டியாளர்கள் பங்கு பெற்றது தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 எத்தனையோ காதல் கதைகள் ஓடினாலும் இந்த சீசனில் முதன் முதலில் ரொமான்ஸை ஆரம்பித்தது அபிராமி தான்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CCQiL2xFhYK/

என்னதான் அபிராமி முகெனிடம் பலமுறை பல விதமாக தனது காதலைத் தெரிவித்தாலும், மிகவும் தெளிவான எண்ணத்துடன் இருந்த முகென், அபிராமி தனக்கு வெறும் தோழி மட்டும் தான் என்று ஆணித்தனமாக கூறிக் கொண்டுதான் இருந்தார். அதேபோல அபிராமி ஒரு கட்டத்தில் முகென் மீது அதிக காதலில் விழுந்து விட தனக்கு வெளியில் நதியா என்ற ஒரு பெண்ணின் மீது மிகவும் ஈர்ப்பு இருப்பதாகவும் நாங்கள் இருவரும் வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்களை பேசி உள்ளோம் என்றும் தனக்கு காதலி இருப்பதை சொல்லியும் சொல்லாமல் கூறியிருந்தார் முகேன்.

Bigg Boss Tamil 3 winner Mugen Rao wishes girlfriend Yasmin Nadiah with an  adorable post - Times of India

முகேன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில்முகென் காதலிப்பதாக சொன்ன நதியா முதன்முறையாக முகெனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். சமீபத்தில் நதியாவின் பிறந்தநாளை கூட கேக் வெட்டி கொண்டாடி இருந்தார் முகென். இந்த நிலையில் முகேன் ராவின் காதலி Cyber Bulling குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில், நான் ஒரு நடிகை நான் இந்த துறையில் நுழையும்போது எனது நிறம் குறித்தும் என்னுடைய உருவம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை நான் சந்தித்திருக்கிறேன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இருந்த விமர்சனங்கள் கடந்த ஆண்டு மட்டும் அதிகமாக இருந்தது. அது மாதிரி சமயத்தில் நமக்காக நமது நண்பர்கள் இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவர்கள் எல்லாம் என்னை இழிவாக பேசியவர்கள் பக்கம் சாய்ந்து விட்டார்கள். அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news