அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இந்த மேலும், நல்ல குடும்ப சென்டிமன்ட் படமாகவும் இது அமைந்துள்ளது.
சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்தார் அஜித். இதனால் மீண்டும் சிவாவுடநா என்று ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வந்தனர். அந்த கவலையை போக்கி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார் சிவா.
ஆனால், இந்த படத்தின் கதை கரு தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ என்ற படத்தின் கதை போல உள்ளது என்று தெலுகு வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.
கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பின்னர் மகனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட அதை தந்தை எப்படி குணப்படுத்துகிறார்? மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது தான் துளசி படத்தின் கதை.
தற்போது வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும் அதே கதை தான் என்ன ஒரு சின்ன வித்யாசம் இதில் மகனுக்கு பதிலாக மகள் இருக்கிறார். துளசி படத்தை தான் சிவா கொஞ்சம் தூசி தட்டி கொடுத்துள்ளார் என்று தெலுகு வட்டாரத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.