விஜய் படம் மட்டும் காபி காப்பின்னு சொல்றீங்களே, அஜித்தின் விஸ்வாசம் படமே காப்பியாமே ? – அதுவும் இந்த தெலுகு படத்தின் காப்பியாம்.

0
811
ajith
- Advertisement -

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் காப்பி அடிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் அஜித். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இவருடைய படம் திரையரங்களில் வெளிவருகிறது என்றால் போதும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸ் இடம் பெரும்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எப்போதும் கோடியில் தான் வசூலை குவிக்கும். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று விசுவாசம். இந்தப் படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அஜீத் குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிவா தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விஸ்வாசம் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தியாகராஜன் இந்த படத்தை தயாரித்திருந்தார். அப்பா, மகள் இருவருக்கும் இடையிலான பாசத்தை அழகாக காண்பித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தது. இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் காப்பி என்று தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால்,

விஸ்வாசம் திரைப்படம் காப்பி:

விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த துளசி என்ற படத்தின் காப்பியாம். அதாவது தெலுங்கில் கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் துளசி. இந்த படத்தில் நயன்தாராவை வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்கிறார். பின் அவரின் அடிதடி சண்டைகள் பார்த்து தனது குழந்தையுடன் வேறு ஒரு ஊருக்கு நயன்தாரா சென்று விடுகிறார். இதன் பின் தன் குழந்தையை கூட்டி சென்ற ஊருக்கு வெங்கடேஷ் செல்கிறார். அப்போது வெங்கடேஷ் தன் குழந்தையை சந்திக்கிறார்.

-விளம்பரம்-

தெலுங்கில் வெளிவந்த துளசி படம்:

பிறகு கிளைமாக்ஸில் வெங்கடேஷ் தன் குழந்தையுடன் சேருகிறார். அதேபோல் தான் விஸ்வாசம் படத்திலும் கதைக்களமும் அமைந்துள்ளது. என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இரண்டு படத்திலும் நயன்தாரா தான் நடித்து இருக்கிறார். தற்போது இதை சமூக வலைத்தளத்தில் பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். ஆயிரம் சொன்னாலும் விஸ்வாசம் வேற லெவல் தான் என்று அஜித் ரசிகர்கள் கூறுகிறார்கள். தற்போது அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார். போனிகபூர் தயாரித்துள்ளார்.

வலிமை படம்:

சமீபத்தில் தான் வலிமைப் படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் சோஷியல் குஷியில் உள்ளார்கள். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் ட்ரைலர் மூலம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய படமாகவே தெரிகிறது. பொங்கல் அன்றே படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வலிமை படம் தள்ளி போனது. மேலும், ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement