சர்காரெல்லாம் ஓரம் போ..! இணையத்தில் கசிந்த விஸ்வாசம் பாடல்.!

0
530
vijay

இயக்குனர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்பாரதி எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள ஓப்பனிங் பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதுவே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கலாம் என்று கூறப்பபட்டது. இந்நிலையில் “விஸ்வாசம் ” படத்தில் இருந்தது ஒரு பாடலின் ஆடியோ மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

“வெட்டி கட்டு, ஏத்தி கட்டு” என்று துவங்கும் அந்த பாடலை இசையமைப்பாளர் இமான் பாடியுள்ளார். இந்த பாடலை கேட்கும் போது கண்டிப்பாக இந்த பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் இது “விஸ்வாசம் ” படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் தானா என்பது ஊர்ஜிதமாகவில்லை.