எது மாஸ்..? சர்காருக்கு போட்டியாக..விஸ்வாசம் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்.!

0
456

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக “விஸ்வாசம் ” படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் பாரதி பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழில் வெளியான “திமிரு புடிச்சவன், பறவை, காளி ” போன்ற படங்களால் பாடலாசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் “சர்கார்” படத்தில் இருந்து சிம்டாங்கரான் பாடல் வெளியானதை அடுத்து பல்வேறு பாடலாசிரியர்களும் தாங்கள் எழுதியுள்ள பாடல் வேல்;வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் அருண் பாரதியும் சமீபத்தில் “விஸ்வாசம் ” படத்தில் தான் எழுதியுள்ள பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார்.

Sarkar

சமீபத்தில் “விஸ்வாசம் ” இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் முதல் வரிகளை மட்டும் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி, எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல என்ற பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் வரிகளில் ‘தல’ என்ற சொல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.