விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சி.! வெளியானது முதல் விமர்சனம்.! படம் எப்படி ?

0
813

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை படகுழுவும் தணிக்கை குழுவும் ஏற்கனவே கண்டு கழித்து விட்டனர்.

சிவா மற்றும் அஜித் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்கள் பார்க்கும் படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்திருந்தார். மேலும், அஜித்தும் சிவாவிடம், நாம் ஒன்றாக பணியாற்றிய படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்று கூறினார் என்று சிவா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தை அரபு நாட்டின் தணிக்கை குழுவும் பார்த்துள்ளது. அதில் முக்கிய நிர்வாகியான உமர் சந்து என்பவர் படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் விமரிசனத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்சாரில் படம் பார்த்து முடித்து விட்டேன். என்ன ஒரு பயங்கர மிரட்டலான மாஸ் பொழுதுபோக்கு படம். விஸ்வாசம் படத்தின் முதல்பாதி சூப்பராகவும், நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடனும் நிறைந்துள்ளது. அஜித் மிரட்டலாக நடித்துள்ளார். ரசிகர்களை இதயத்தை திருடுகிறார்” என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement