விஸ்வாசம் “Shooting” இங்குதான் நடக்கிறதா..? படையெடுக்கும் ரசிகர்கள்.! எங்கே தெரியுமா..?

0
445
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைத்துள்ள படம் ‘விஸ்வாசம்’. வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில பல காரணங்களால் அடுத்து ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த செப்டம்பர் மாதம் 13 தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடபோவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால்,கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட் 23) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருந்தது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத், ராஜ்முந்திரி போன்ற பல இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆந்திராவில் எடுக்கப்பட இருந்த காட்சிகள் நிறைவுபெற்ற நிலையில்படக்குழுவினர் ஆந்திராவில் இருந்து திரும்பியுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் அடுத்தகட்ட படபிடிப்புகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Advertisement