தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. மேலும், விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவந்த போது நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறி இருந்தார் நடிகை அனிகா.
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள். மேலும், ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது . தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல்வேறு ஹீரோக்களின் படத்தில் நடித்துள்ளார் பேபி அனிகா. மேலும், நடிகை அனிகா அவர்கள் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார்.
தற்போது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் புடவையில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தளத்தில் வைரலானது. அதே போல இவர் அடிக்கடி மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் டாப் ஆங்கிளில் ஸ்லீவ் லெஸ் உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார் அணிகா. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.