விவேகத்தை தாண்டி செல்லும் மெர்சல்! செம்ம சாதனை!

0
2328
MERSAL-VIVEGAM

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட போட்டி இணைகள் என்றால் அது விஜய்-அஜித் தான். ஒவ்வொரு படம் வரும் போதும் அடுத்தடுத்து ஏதாவது ஒரு விதத்தில் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமே இவர்களின் படத்தின் வேலை.

டீசர் வியூ, லைக்ஸ் என மாறி மாறி தனளுக்குளேயே சாதனைகளை முறியடித்துக் கொண்டு புதிய புதிய சாதனைகளை படைப்பதும் இவர்களின் பொழுது வேலை. இவர்கள் என்றால் இவர்களது ரசிகர்கள்.

- Advertisement -

Actor Vijay

சமீபத்தில் எர்சல் டீசர் வெளியாகி அஜித் நடித்த விவகம் பட மொத்த யூடியூப் சாதனைகளை சில மணி நேரங்களில் தவிடு பொடியாக்கியது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது நாளை வெளியாகவுள்ள மெர்சல் படத்தின் டிக்கெட் ரிசர்வேசன் துவங்கியதும் விவேக படத்தில் மற்றொரு சாதனையையும் முறியடித்துள்ளது ‘மெர்சல் காளை’

-விளம்பரம்-

டிக்கெட் புக்கிங் துவங்கியவுடன் ‘புக் மை சோ’ இணையதளத்தில் விவேகம் படத்திற்கு ‘வோட்டிங்’ செய்தவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 48000 பேர். ஆனால், மெர்சல் மாஸாக செய்த எண்ணிக்கை என்ன தெரியுமா? அதாவது 1,20,000திற்கும் மேல் மெர்சல் படத்தை ஆவளோடு எதிர்பார்த்து வோட்டிங் செய்துள்ளனர்.

இப்படி பார்க்கும் போது விவேகத்தின் மற்றொரு சாதனையையும் முறியடித்துள்ளது மெர்சல். இதன் மூலம் படத்தின் ஹைப் ஏறியதுடன் முதல் நாளிலேயே தமிழ் சினிமாவில் இதுவரை வந்த வசூல் சாதனைகளை முறியடிக்க தயாராகி இருக்கிறார் ‘வசூல் சக்ரவர்த்தி’ தளபதி விஜய்.

எப்படியும் கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் நாளை அதிரப்போவது உறுதி.

Advertisement